districts

img

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

தஞ்சாவூர், செப்.11- தஞ்சாவூர் மாவட்டம், கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மையத்தின் சார்  பில் 53 ஆம் ஆண்டு, பேராவூரணி குறுவட்ட  விளையாட்டு போட்டிகள், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளை யாட்டு மைதானத்தில் நடைபெற்றது.  மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்  மதி தலைமை வகித்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்தார். கொன்றைக்காடு அரசு  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கு.மகேஸ்வரி வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.கே.ராமமூர்த்தி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி கவிதா ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர்.  பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் விளையாட்டுப் போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.  தடகள போட்டிகள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், தடை  தாண்டுதல், ஈட்டி, குண்டு, வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், 25 பள்ளி களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள், பெண்கள் பிரிவிலும் அதிக புள்ளிகளுடன் குருவிக்கரம்பை அரசு  மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனர்.  இந்நிகழ்ச்சியில், பேராவூரணி பேரூ ராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், பேரா வூரணி காவல் ஆய்வாளர் செல்வி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர் முதல்வன், குருவிக்கரம்பை பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன்  மற்றும் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  உடற்கல்வி ஆசிரியர் சங்கீதா  நன்றி கூறினார்.

;