districts

கும்பகோணம் - ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம்- நீடாமங்கலம் ரயில் சேவை எப்போது?

கும்பகோணம், நவ.17-- கும்பகோணம் அனைத்துத் தொழில் வணிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் கும்ப கோணத்தில் கூட்டமைப்பின் தலைவர் சோழா.சி. மகேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில், உயர்த்தப்பட்ட  சிறு-குறுதொழில்களுக்கு உயர்த்தப்பட்ட 25 சதவீத   மின் கட்டனத்தை 15 சதவீதமாக   தமிழக அரசு குறைத்துள்ளதற்கு நன்றி  தெரிவிக்கப்பட்டது.  கடுமையாக உயர்த் தப்பட்டுள்ள  சொத்து வரியைக் குறைக்க  வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கும்பகோ ணத்தை  தலைமையிடமாக்  கொண்டு புதிய  மாவட்டம்  உருவாக்கப்படும் என்ற கோரிக்  கையை நிறைவேற்ற வேண்டும். நீண்ட காலமாக  நிறைவேற்றப்படாமல் உள்ள  கும்பகோணம் ~ ஜெயங்கொண் டம் -  விருத்தாச்சலம் (இணைப்பு) நீடாமங்க லம்வரை   புதிய இரயில் பாதைத் திட்டத்தை  2028 -ஆம் ஆண்டு  நடைபெற உள்ள மகா மகம் விழாவை முன்னிட்டு முன்னுரிமை அடிப்படையில் சிறப்புத் திட்டமாக  நிறை வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் துணைச் செயலாளர்கள் அண்ணாதுரை, வேதம் முரளி, துணைத் தலைவர் பா.ரமேஷ்ராஜா மாவட்ட வணி கர் சங்கங்களின் பேரமைப்புப் பொருளா ளர் மு.கியாசுதீன்,  கூட்டமைப்பின் செயலா ளர்  வி.சத்தியநாராயணன், பொருளாளர்  த. மாணிக்கவாசகம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;