districts

img

தோழர் கே.ரமேஷ் மறைவுக்கு அஞ்சலி

தஞ்சாவூர், மே 9 - கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப் பினரும், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க முன்னாள் மாநில நிர்வாகியுமான தோழர் ரமேஷ் மறைவுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட் டக்குழு அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.  மூத்த தலைவர் என்.சீனிவாசன் தலைமை வகித்து  தோழர் ரமேஷ் உருவப் படத்திற்கு மாலை அணி வித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர். மனோகரன், பி.செந்தில் குமார், என்.சிவகுரு, தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நட ராஜன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் என்.குருசாமி, என்.சரவணன், தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன், மாணவர் சங்க  மாவட்டத் தலைவர் அர்ஜூன்  மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

;