districts

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்

தஞ்சாவூர், ஆக.12 -  மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து எடுத்துக் கூறுவது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியக் குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.வி.குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு பேசினர்.  கூட்டத்தில், “மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கை கள், விலைவாசி உயர்வு, அரிசி, தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகள், விவசாய விளை  பொருட்களுக்கு கட்டுப்படியான விலை, பண வீக்கம், மோடி அரசின் 8 ஆண்டு கால  ஆட்சியில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனை கள் என மோடி அரசின் வேதனைகளை, வீடு  வீடாகச் சென்று மக்களை சந்தித்து துண்டுப்  பிரசுரங்கள் வழங்கி, சிபிஎம் சார்பில் மக்கள்  சந்திப்பு இயக்கம் நடத்துவது என தீர்மா னிக்கப்பட்டது.  மேலும், பேருந்து நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ள பொதுக் கழிப்பறையை திறந்து,  கட்டணமில்லா கழிப்பறையாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு, பேரூராட்சி நிர்வாகம் கொண்டு வர வேண்டும். செகந்திரா பாத் - ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் பேரா வூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்ல  ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும்’‘ என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

;