districts

img

சேதுபாவாசத்திரத்திலிருந்து கடலூருக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், டிச.4 - புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு, தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில், நிவாரணப் பொருட்கள் சேகரித்து அனுப்பப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டு கோளின் படி, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் அடங்கிய சுமார் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான, நூற்றுக்கும் மேற்பட்ட நிவாரணப் பைகள் சரக்கு வேன் மூலம் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் தலைமை வகித்தார். சேதுபாவா சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்தி ரன், சடையப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலகப் பணியா ளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒப்பந்த தாரர்கள் கலந்து கொண்டனர்.