districts

img

திருக்காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை அமைத்திடுக! விவசாயிகள் சங்க மாநாடு கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 30-  போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக திருக்காட் டுப்பள்ளியில் புறவழிச்சாலையை அமைத்து தரவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  சங்கத்தின் பூதலூர் வடக்கு ஒன்றிய 22-ஆவது மாநாடு திருக் காட்டுப்பள்ளியில் செவ்வாயன்று நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ஆர்.உதயகுமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பி.முருகேசன் வேலை அறிக்கை வாசித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்டப் பொரு ளாளர் எம்.பழனி அய்யா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  இதில், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் எம்.ரமேஷ், விவசா யத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.மெய்யழகன், மாதர் சங்கம் ஒன்றியச் செயலாளர் பி.கலைச்செல்வி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  மாநாட்டில், ஒன்றியத் தலைவ ராக கே.காந்தி, செயலாளராக ஆர். உதயகுமார், பொருளாளராக திரு ஞானசம்பந்தம், துணைத் தலைவ ராக சி.கரிகாலன், துணைச் செயலா ளராக ஏ.சத்தியமூர்த்தி, எம்.கணபதி சுந்தரம், பி.பாலசந்தர், ஏ.அறி வழகன், பி.கலைச்செல்வி, பி.முரு கேசன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். கூட்டத்தில், மனையேறிப்பட்டி- கடம்பன்குடி சாலையை ஆனந்தக் காவேரி கரை வழியாக கடம்பன்குடி  வரை இணைத்து தர வேண்டும். திருக்காட்டுப்பள்ளி புறவழிச் சாலையை அமைத்து தர வேண்டும். அனைத்து விவசாயிக ளுக்கும் விவசாயக் கடன், உரம், இடுபொருட்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. 

;