குடவாசல், அக்.29 - தமிழக அரசின் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னை காரப்பக்கத்தில் உள்ளது. அப்பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியான திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் அருகே காட்டூரில் இயங்கி வரும் தியாகராஜா கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜி.உமாமகேஸ்வரிக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பல்நோக்கு அரங்கில் கடந்த அக்.19 அன்று நடந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பஞ்சநதம், முதல்வர் உமா மகேஸ்வரிக்கு விருது வழங்கி சிறப்பித்தார். பல்கலை.யின் பதிவாளர் முனைவர் சௌந்தர்ராஜன் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.