districts

சோலார் சிக்னல் லைட்களை  திருடிச் செல்லும் மர்ம நபர்கள்

தஞ்சாவூர், மே 26 - நெடுஞ்சாலைத் துறை யால் அமைக்கப்பட்டுள்ள சோலார் சிக்னல் லைட்க ளை திருடிச் செல்லும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட் டை, ஒரத்தநாடு, திருச்சிற் றம்பலம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் முக்கிய சாலை சந்திப்பு களில், விபத்துக்களை தடுக் கும் வகையில், ஆபத்தான இடம் என வாகன ஓட்டிக ளுக்கு தெரியப்படுத்தும் வகையில், சிக்னல் சிவப்பு விளக்கு, நெடுஞ்சாலைத் துறை சார்பில் சோலார் பேனல் அமைப்புடன் நிறு வப்பட்டுள்ளது.  இந்நிலையில் நெடுஞ் சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களை பல இடங்க ளில் மர்மநபர்கள் திருடிச் சென்று விடுகின்றனர். இந்த சோலார் பேனல்களை பயன்படுத்தி தங்கள் வீடு களுக்கு வேண்டிய மின் விளக்கு வசதிகளை செய்து கொள்ள முடியும் என்பதால் இவற்றை மர்மநபர்கள் திரு டிச் செல்வதாகக் கூறப்படு கிறது.  பேராவூரணி நகரில் பட்டுக்கோட்டை சாலையில், ஆண்டவன்கோவில் பகுதி யில் மதுக்கடைகள் அமைந் துள்ள இடத்தில் இவ்வாறு சிக்னல்கள் திருடப்பட்டுள் ளது. பல்வேறு இடங்களில் இதே நிலை தான் உள்ளது.  எனவே, இதுகுறித்து காவல்துறையினர் விசார ணை நடத்தி தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

;