districts

அரசுப் பேருந்தில் தவறவிட்ட நகை பயணியிடம் ஒப்படைப்பு

கும்பகோணம், ஜூன் 15- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கணபதி அக்ரஹா ரம், மணலூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தபால்துறை ஊழியர் சரவணனின் மனைவி ராஜலட்சுமி (40).  அதே பகுதியை சேர்ந்தவர் ரேணுகா. இவர்கள் இருவரும்  வியாழனன்று காலை சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து அரசு பேருந்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். 

அந்த பேருந்தில் ஓட்டுநராக எடப்பாடியைச் சேர்ந்த முருகேசனும், நடத்துநராக அதே ஊரைச் சேர்ந்த சண்முக மும் பணியில் இருந்தனர். அந்த பேருந்து மதியம் 2 மணியள வில் தஞ்சை அருகே அய்யம்பேட்டைக்கு வந்தது. ராஜ லட்சுமியும், ரேணுகாவும் பேருந்திலிருந்து இறங்கி மினி பேருந்தில் ஏறி தங்கள் ஊருக்கு சென்றனர்.

மினி பேருந்தில் ஏறிய சிறிது நேரத்தில் ராஜலட்சுமி தனது  கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் சங்கிலி இல்லாததை கண்டு  அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜலட்சுமி அய்யம்பேட்டை  போலீசில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து போலீ சார், ராஜலட்சுமி வந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்து நரிடம் விவரத்தை தெரிவித்தனர். உடனே அவர்கள் பேருந்தில் ராஜலட்சுமி அமர்ந்திருந்த இருக்கையில் சென்று  தேடிப் பார்த்தனர்.

அப்போது ராஜலட்சுமி அமர்ந்திருந்த இருக்கையின் அடியில் 5 பவுன் சங்கிலி கிடந்தது. அந்த பேருந்து கும்பகோணம்  வந்தவுடன், ஓட்டுநர் முருகேசன், நடத்துநர் சண்முகம் ஆகி யோர் கும்பகோணம் மேற்கு காவல்துறையில் தங்க செயினை ஒப்படைத்தனர்.

இத்தகவல் அறிந்த ராஜலட்சுமி, தனது கணவர் சரவண னுடன் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்கு வந்த  நிலையில், காவல் ஆய்வாளர் ஜெகதீசன், உதவி ஆய்வாளர்  சுபாஷினி, ஆகியோர் முன்னிலையில் தாலிச் சங்கிலி ராஜ லட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரூ.3 லட்சம் மதிப்பிலான சங்கிலியை ஒப்படைத்த ஓட்டுநர்  முருகேசனுக்கும், நடத்துநர் சண்முகத்துக்கும் ராஜலட்சுமி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

;