districts

img

செங்கமங்கலம் மின்வாரிய ஊழியர் குடியிருப்பு புதிதாக கட்டப்படுமா?

தஞ்சாவூர், ஜூலை 3-  செங்கமங்கலம் துணை மின் நிலையம் பகுதியில், பாழடைந்த நிலை யில் உள்ள ஊழியர் குடியிருப்பை இடித்து அகற்றி விட்டு புதிதாகக் கட்டித்  தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள் ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே புதுக்கோட்டை சாலையில் செங்கமங்கலம் (110 கி.வா) துணை மின் நிலையம் உள்ளது. இதில் 10-க்கும்  மேற்பட்டோர் பணியாற்றி வருகின்ற னர். இந்த வளாகத்திலேயே மின்வாரிய  அலுவலகமும் அமைந்துள்ளது. இதன்  எதிரே சாலையின் மறுபுறம், கடந்த 30  ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊழி யர்கள் குடியிருப்பு உள்ளது. இதில் 7,8 வீடுகள் உள்ளன. இந்த  ஊழியர் குடியிருப்பு தற்போது பயன்பா டற்று, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் கருவேல மரங்கள், புதர்கள் மண்டிக் கிடப்பதால், பாம்புகள்  நடமாட்டம் அதிகம் உள்ளது. இங்கு  இரவு நேரங்களில் சமூக விரோதிகள்  நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள ஊழியர் குடியிருப்பை இடித்து  அகற்றி விட்டு, சுற்றுச்சுவர் அமைத்து,  அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய  குடியிருப்பை கட்டித் தர வேண்டும் என  தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

;