districts

அதிக ஒலி எழுப்பி செல்லும் பேருந்துகள்: நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், மே 17 - அதிக ஒலியை எழுப்பியவாறு, நகருக் குள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதி விரைவாகச் செல்லும் பேருந்துகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு கூட்டம் நீலமோகன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், “பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு, பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள, கட்டணமில்லா கழிப்பறையை பொதுமக்கள், பயணிகள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க வேண்டும். நகருக்குள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியவாறு வரும் பேருந்துகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். பட்டுக்கோட்டை சாலையில், காட்டாறு அருகே சலவைத் தொழிலாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை உரிய அளவீடு செய்து வழங்க வேண்டும். ரயில்வே குட்ஷெட் அருகே இருந்த அங்காடியை மீண்டும் பழைய இடத்திலேயே அமைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;