districts

தமிழகத்தில் முதல் முறையாக கும்பகோணத்தில் தாய்ப்பால் ஆலோசனை மையம் திறப்பு

கும்பகோணம், ஏப்.18 - தமிழகத்தின் முதல்முறையாக கும்பகோ ணத்தில் தாய்ப்பால் ஆலோசனை மையம் திறப்பு விழா நிகழ்ச்சி கும்பகோணம் கார்னே சன் மருத்துவமனையில் நடைபெற்றது.  தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் தாய்ப்பால் ஆலோசனை மையம் கும்பகோணம் மாநகராட்சி கார்னே சன் மருத்துவமனையில் கும்பகோணம் மாநக ராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் தமிழக அரசின் மருத்துவ பணிகள் (ESI) இயக்குநர் டாக்டர் ராம மூர்த்தி புதிய மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ஔவையார் பாடல் முதல் அண்ணாமலை திரைப்பட பாடல் வரை  பாடி, பாலின் முக்கியத்துவம் தாய்ப்பாலின்  மகத்துவம், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுகிறது. தாய்க்கும்,  குழந்தைக்குமான உறவு பலப்படுத்தப்படு கிறது. குழந்தை ஆரோக்கியத்துடனும், நல்ல  அறிவு வளர்ச்சியுடனும் நோய் எதிர்ப்பு  சக்தி உள்ள குழந்தைகளாக வளர்வதாக வும், குழந்தைகள் இறப்பு சதவீதம் குறைவ தாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரசின் தலைமை கொறடா  கோவி.செழியன், மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் ராமலிங்கம், கும்பகோணம்  சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத் தலைவர்  கல்யாணசுந்தரம், துணை மேயர் தமிழழ கன், டாக்டர் பழனிவேல், ஒருங்கிணைப்பாளர்  டாக்டர் சாம்பசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கும்பகோணத்தில் திறக்கப்பட்டுள்ள தாய்ப்பால் ஆலோசனை மையம் ஒவ்வொரு  வியாழக்கிழமையும் காலையில் செயல்ப டும். தாய்மார்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங் கள் அனைத்திற்கும் இலவசமாக ஆலோ சனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

;