districts

img

சீரழிந்து வரும் நைனான்குப்பம் பாசன வாய்க்கால் கண்டுகொள்ளாத பொதுப் பணித்துறை

தஞ்சாவூர் ஜூலை 4 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அறந் தாங்கி சாலை, பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே, நைனான்குப்பம் தாய் வாய்க்கால் உள்ளது.  காவிரி பாசன வாய்க்கா லான ராஜாமடம் வாய்க்கா லில் இருந்து, பிரியும் இந்த  பாசன வாய்க்கால் மூலம் 1,563.37 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த வாய்க்கால் சாந்தாங் காட்டிலிருந்து பிரிந்து சுமார் 3 கி.மீ தூரம் பய ணித்து, முதல்சேரி ஏரியில் கலக்கிறது. கல்லணையில் தண்ணீர் திறந்து விடப் பட்டும், இதுவரை இந்த கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட வில்லை. மேலும், இந்த பாசன வாய்க்காலில் குப்பை கள் கொட்டப்பட்டு, தண்ணீர்  ஓட வழியின்றி அடை பட்டு, பாசி படர்ந்து காணப் படுகிறது. இப்பகுதியில் குடியிருப்போர் தங்கள் வீடு களின் கழிவு நீரை பாசன  வாய்க்காலில் குழாய் பதித்து திறந்து விடு வதால், கடும் துர்நாற்றம்  வீசுவதோடு, கொசுத் தொல்லை அதிகமாக உள் ளது. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.  மேலும், பாசன வாய்க்கா லில் படிக்கட்டுகள் சேத மடைந்தும், வாய்க்காலின்  குறுக்கே அமைக்கப்பட் டுள்ள பாலங்கள் உடைந்தும் காணப்படுகிறது. கடந்த பல வருடங்களாகவே இந்த  பாசன வாய்க்கால் தூர்வாரப் படாமல், பொதுப்பணித் துறை அதிகாரிகளால் கண்டு  கொள்ளப்படாமல் உள்ளது.  தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பாசன வாய்க்கால் களை தூர்வார பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய் கிறது. ஆனால் பொதுப் பணித்துறை அதிகாரி கள் இந்த பணத்தை முழு மையாக பயன்படுத்தாமல், தூர்வாரப்பட்டதாக பொய் கணக்கு காட்டி, பணத்தை சுருட்டிக் கொள்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இதன் காரணமாக பாசன வாய்க்கால்கள் ஒவ் வொன்றாக வீணாகி வரு கிறது. எனவே இந்த நை னான்குப்பம் பாசன வாய்க்காலை உடனடியாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, பாலங்கள்-படித்துறைகள் அமைத்து தரவும், கழிவுநீர் பாசன வாய்க்காலில் விடப் படுவதை தடுத்து நிறுத்தி சீரமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

;