districts

தமிழக முதல்வர் பிறந்ததினம் மாணவர்களுக்கு மதிய உணவு

பேராவூரணி, மார்ச் 28 -  தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணியில் தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி மாணவர் களுக்கு திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியம் சார்பில் ஒட்டங்காட்டில் கட்சிக் கொடி யேற்றப்பட்டது. தெற்கு ஒன்றி யச் செயலாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். தொடர்ந்து, ஒட்டங்காடு கருப்பையா உடையார் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி யிலும், பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் மாணவ, மாணவி கள் சுமார் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.  நிகழ்வில், ஒன்றியச் செய லாளர்கள் இளங்கோவன் (பேராவூரணி வடக்கு), சேது பாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக் கம் (சேதுபாவாசத்திரம் வடக்கு), ரவிச்சந்திரன் (சேதுபாவா சத்திரம் தெற்கு), மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர்,  மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அலிவலம் மூர்த்தி, தலை மைப் பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல்மஜீத், சுற்றுச்சூழல் அணி மாநில நிர்வாகி கார்த்தி கேயன், பள்ளி தலைமையாசிரி யர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.