districts

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெற திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தல்

தஞ்சாவூர், பிப்.21 - திருச்சி - மயிலாடுதுறை இடையே பள்ளி, கல்லூரி  மாணவர்களும், அரசு அலுவ லகங்களில் பணிபுரிவோரும் பயணம் செய்யும் வகையில் பயணிகள் ரயிலை காலை, மாலை நேரத்தில் இயக்க வேண்டும் என தஞ்சாவூர் -  திருச்சி ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அச்சங்கத் தின் செயலாளர் வழக்குரை ஞர் வெ.ஜீவக்குமார், திருச்சி  கோட்ட ரயில்வே மேலாள ருக்கு அனுப்பியுள்ள கோ ரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது: கொரோனா ஊரடங் குக்கு முன்பு இயக்கப்பட்ட திருச்சி - மயிலாடுதுறை பய ணிகள் ரயில் (வண்டி எண்-56824) காலை நேரத்திலும், அதே போல் மயிலாடுதுறை - திருச்சி ரயில் (வண்டி எண் 56825) மாலை நேரத்திலும் இயக்கப்பட்டதன் மூலம், நாள்தோறும் பள்ளி, கல்லூரி  செல்லும் மாணவ, மாணவி கள், அரசு, தனியார் நிறுவ னங்களுக்கு பணிக்கு செல் லும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரயிலில் திருச்சியில் தொடங்கி, பூதலூர், தஞ்சா வூர், பாபநாசம், கும்பகோ ணம், ஆடுதுறை வழியாக மயிலாடுதுறை வரை பய ணம் செய்தனர். கொரோனா ஊரடங்கின் போது இந்த ரயில்கள் நிறுத் தப்பட்டன. கொரோனா ஊர டங்கு தளர்வின் போது, பல பயணிகள் ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டு வரும் போது, இந்த இரு ரயில்கள் மட்டும் இதுவரை இயக்கப்படவில்லை. இத னால் பொதுமக்கள் நாள்தோ றும் கூடுதல் தொகையையும், நேரத்தையும் செலவிட்டு, பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியிருப்பதால், பொருளாதார ரீதியாக ஒவ் வொருவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போல்,  ரயில்களில் முன்பிருந்த மாதாந்திர சீசன் கட்ட ணத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு வழக்குரைஞர் வெ.ஜீவக் குமார் மனுவை அனுப்பியுள் ளார்.

;