districts

வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூர், மே 12- தஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பை, ஊமத்த நாடு, மரக்காவலசை மற்றும் சொக்கநாதபுரம் ஆகிய நான்கு கிராம பஞ்சாயத்துகள் 2021-2022 ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது  இந்நிலையில், மே 10 அன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை,  வேளாண்மை பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, மின்சாரத் துறை, பொதுப் பணித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, கூட்டுறவுத் துறை சார்ந்த அலுவ லர்கள் இம்முகாமில் பங்கு பெற்று  தங்களது துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.  முகாம்களில் பட்டா, சிட்டா மாற்றம் செய்திட விண்ணப்பம், வண்டல் மண் எடுப்பதற்கு விண் ணப்பம் போன்ற விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. குருவிக்கரம்பை மற்றும் சொக்கநாதபுரம் பஞ்சாயத்துகளில் சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந் தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.   முகாமிற்கு, சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சங்கவி தலைமை ஏற்று தொழில்நுட்ப உரை மற்றும் திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார். ஊராட்சி மன்றத் தலைவர்கள் வைரவன் (குருவிக்கரம்பை), குலாம்கனி (ஊமத்தநாடு), ராம் பிரசாத் (சொக்கநாதபுரம்), நிரஞ்சனா (மரக்காவ லசை) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;