districts

பேராவூரணியில் 3 உயர்மட்டப் பாலங்கள் அமைத்து தர வேண்டும் அசோக்குமார் எம்எல்ஏ கோரிக்கை

தஞ்சாவூர், செப்.8 - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  கடந்த மாதம் 23 ஆம் தேதி “உங்கள்  தொகுதியில் முதலமைச்சர்” திட்டத் திற்காக செயல்படுத்தப்பட வேண்டிய, 10 அம்சங்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் படி, பேராவூரணி தொகுதி பொது மக்களின் நீண்ட கால முக்கிய கோரிக் கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார் மனு வழங்கினார்.  அதில், “பேராவூரணி பகுதி தென்னை சார்ந்த பகுதியாக இருப்ப தால் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் மற்றும் தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். தென்னை சார்ந்த தொழில் பூங்காவும், நவீன அரிசி ஆலை  அமைத்திடவும், பெரிய நெல் சேமிப்பு  கிட்டங்கியும் அமைக்க வேண்டும்.  பேராவூரணி அரசு மருத்துவமனை கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆன நிலை யில் பழுதடைந்த கட்டிடமாக உள்ளது.  இதனை மாற்றி புதிய கட்டிடம் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் நிறுவி,  அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன  மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.  பேராவூரணி பகுதி நீர்  நிலைகளை தூர்வாரி, நீர் வழித்தடங் களை பராமரிக்க வேண்டும். குறிச்சி கிராமத்தில் பண்ணவயல் ஏரியின் பாசன வசதிக்காக தடுப்பணை அமைக்க வேண்டும்.  வில்லுணிவயல் கிராமத்தில் தடுப்பணை, விளங்குளம் - ஊமத்தநாடு இணைப்பு சாலைக்காக உயர்மட்டப் பாலம், சரபேந்திரராஜன்பட்டினம் பாப் பாங்கண்ணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை,  மருதங்குடி ஆற்றின்  குறுக்கே ரெட்டைவயல் கிராமத்தில்  புதிய அணைக்கட்டு, வில்லுணி  ஆற்றின் குறுக்கே சோமநாதப்பட்டினத் தில் கடல் நீர் உட்புகாமல் இருக்க தடுப்பணை, குருவிக்கரம்பை, கல்லுக் குளம் வாரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து தர வேண்டும்.  ஒட்டங்காடு, மணக்காடு, மல்லிப் பட்டினம், நெய்வேலி, செந்தலைவயல் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும்.

பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலை யில் உள்ள ஆண்டவன் கோயில் காட்டாற்றுப் பாலம், பேராவூரணி - சேது பாவாசத்திரம் சாலையில் உள்ள பூனைக்குத்தி ஆற்றின் குறுக்கே உள்ள  காட்டாற்று பாலம், பேராவூரணி - அறந்தாங்கி சாலையில் சித்தாதிக்காடு காட்டாற்று பாலம் ஆகியவற்றை உயர்மட்ட பாலங்களாக கட்டித் தர வேண்டும். கிராமப்புறச் சாலைகளை மேம்ப டுத்த வேண்டும். பழைய நகரம் சீவன் குறிச்சியில் உயர்மட்டப் பாலம் அமைத்து தர வேண்டும். பேராவூரணி தொகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ),  ஊரணிபுரத்தில் அரசு கலைக்கல்லூரி, தொகுதி முழுவதும் உள்ள அரசு பள்ளி களில் புதிய கட்டிடம், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பெருமகளூர் பேரூராட்சி பகுதியில் காவல் நிலையம், பேராவூரணியில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், போக்குவரத்து காவல்  அலுவலகம் அமைத்து தர வேண்டும்.  பேராவூரணி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை மேம்படுத்த வேண்டும். மனோரா பகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய  சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டும். கடற்கரை முகத்துவாரங் களை தூர்வாரி, கடற்கரையில் முக்கிய இடங்களில் தூண்டில் வளைவு  அமைத்து தர வேண்டும்.  திருச்சிற்றம்பலம், பெருமகளூர் ஆகிய இடங்களில் சார் பதிவாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும். திருச்சிற்றம்பலம், ஒட்டங்காடு ஆகிய பகுதிகளில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் அமைத்திட வேண்டும். தொகுதி  முழுவதும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, மின் இணைப்பு, குடிநீர்  வசதி செய்து தர வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

;