districts

img

திருபுவனம் நகராட்சி 2 ஆவது வார்டு சிபிஐ வேட்பாளர் மணிமூர்த்திக்கு சிபிஎம் வாக்குச் சேகரிப்பு

கும்பகோணம் பிப்.13 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சி தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 2 ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மணிமூர்த்தி போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மணிமூர்த்தியை ஆதரித்து 2 ஆவது வார்டுக்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கதிர், அரிவாள் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, பக்கிரிசாமி, திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சேகர், சங்கர், 8 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் சுப்பிரமணியன் மற்றும் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.