districts

தஞ்சையில் நல்லாசிரியர் விருது பெற 11 பேர் தேர்வு

தஞ்சாவூர், செப்.4 -  தமிழக அரசு ஆண்டுதோறும் ஆசிரி யர் தினமாக செப்.5 அன்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை கொண்டாடும் விதமா கவும், சிறப்பாக பணியாற்றி வரும் ஆசி ரியர்களை கவுரவிக்கும் விதமாகவும் நல்லாசிரியர் விருதை வழங்கி வரு கிறது. அதன்படி, தமிழக அரசு இவ்வாண் டுக்கான நல்லாசிரியர் விருதுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாச்சியார் கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஆ.அல்லி, நீரத்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஞா.சர வணன், பட்டுக்கோட்டை அரசு மகளிர்  மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை  சு.சத்யா, கும்பகோணம் சரஸ்வதி பாட சாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளி  முதுகலை ஆசிரியை கா.லதா, வடசேரி  அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி  ஆசிரியை இரா.சந்திரா, தொண்டராம் பட்டு கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொ டக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை சு. புனிதா, தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இடை நிலை ஆசிரியை செ.அந்தோணி விமலா. கருவளர்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை ப.அறிவுடைநம்பி, சொக்க னாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பெ.பர மேஸ்வரி, மருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ச.ரவிச்சந்தி ரன், திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி பால வி்த்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஜெ.விஜயகுமார் ஆகியோர் விருதுக்கு தேர்வு செய் யப்பட்டுள்ளனர்.  

கணிதத்தில் 14 ஆண்டுகள் சாதனை
மருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரி யரும் மாற்றுத்திறனாளியுமான ச.ரவிச் சந்திரன், தொடர்ந்து 14 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களை 100 சதவீத தேர்ச்சி பெற வைத்துள்ளார். இதில் 5 பேர்  நூற்று நூறு மதிப்பெண்கள் பெற்றுள் ளனர். மேலும், மாணவர்களிடையே மரம் வளர்ப்பு, மாணவர்கள் கீழ்ப்படி தலுடன் நடந்து கொள்ளுதல் ஆகிய வற்றை கடைபிடிக்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை செய்து வந்துள்ளார்.
மாணவர்களை அதிகம் சேர்த்த ஆசிரியை
ஒரத்தநாடு அருகே தொண்டராம் பட்டு கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டில் 35 மாணவர்களாக இருந்த  இடத்தில், தற்போது 152 மாணவர் களாக அதிகரித்துள்ளது. அதேபோல் 2020 ஆம் ஆண்டு முதல் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு 45  மாணவர்கள் படித்து வருகின்றனர்.  மேலும் ரூ.18 லட்சம் மதிப்பில் புதி தாக வேன் வாங்கப்பட்டு, சுற்று வட்டா ரத்தில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல கிராம மக்கள் உதவி யோடு ஏற்பாடுகள் செய்தும், பள்ளியில்  ஸ்மார்ட் வகுப்புகளை நடத்தி வரும்  இடைநிலை ஆசிரியை சு.புனிதா நல்லா சிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நல்லா சிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர் கள் ஒவ்வொருவரும் பல்வேறு சாத னைகளை புரிந்தமைக்காக தேர்வு செய் யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான விருது சென்னையில் திங்கட்கிழமை (செப்.5)வழங்கப்பட உள்ளது.

;