districts

img

சேலம்: போனஸ் பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க கோரி சேலம் உருக்காலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

போனஸ் பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க கோரி சேலம் உருக்காலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போனஸ் மீதான தொழிலாளர் விரோத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.  நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக முடிக்க வேண்டும். 39 மாத அரியர்ஸ் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சேலம் உருக்கு ஆலை தொழிலாளர்கள் சார்பில் சேலம் ஊருக்கு ஆலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் சங்கத்தின் பொருளாளர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் பி. பன்னீர்செல்வம் பேசினார்.இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டு சிஐடியு உருக்கு ஆலை தொழிலாளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.