districts

img

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி சிறுமி சாதனை ஓட்டம்

சேலம்,ஜன.18- பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி சேலத் தில் 13 கிலோ மீட்டர் தூரம் இடை நில்லா ஓட்டத்தில் ஈடுபட்ட 8 வயது சிறுமி உலக சாதனையாளர் புத்தகத் தில் இடம் பெற்றார்.  சேலம் மாவட்டம், அடிவாரம் பகு தியில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு பயின்று வருபவர் மாணவி பிரதா (8). இவர் கோவிட் 19 விழிப்புணர்வு, பெண்களின் பாது காப்பு மற்றும் முன்னேற்றம் ஆகி யவற்றை வலியுறுத்தி சேலத்தில் 13 கி.மீ. தொலைவு இடைநில்லா ஓட் டத்தை மேற்கொண்டார். சிறுமியின் இந்த சாதனை ஓட்டத்தை மாநகர காவல்துறை உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சேலம் அடி வாரத்தில் உள்ள தனியார் பள்ளி யில் இருந்து துவங்கிய சாதனை ஓட்டம் அஸ்தம்பட்டி, 5 ரோடு வழியாக சென்று காந்தி விளையாட்டு மைதா னத்தில் முடிவடைந்தது. இதில், 13 கி.மீ தொலைவை 1.16 மணி நேரத் தில் சிறுமி கடந்து சாதனை படைத் தார். இம்முயற்சியை உலக சாதனை யாக அங்கீகரித்து நோபுல் புக் ஆப் வேர்ல்டு ரெகார்ட்ஸ் அதற்கான கேட யம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறுமியை பாராட்டினர். உலக அள வில் 8 வயதில் 13 கிலோ மீட்டர் தொலைவு இடைநில்லா ஓட்டம் மேற் கொண்டு உலக சாதனையாளர் புத்த கத்தில் ஒரு சிறுமி இடம் பிடித்துள் ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

;