districts

img

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள ஆயத்தம் குழந்தைகளுக்கு பிரத்யேக சிகிச்சையளிக்க மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி

சேலம், ஜூலை 30- கொரோனா 3வது அலையை எதிர் கொள்ளும் வகையில், சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு பிரத்யேக சிகிச்சையளிக்க மருத்துவர் கள், செவிலியர்களுக்கு பயிற்சி அளிக் கப்பட்டு வருவதாக மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி தெரி வித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில், அடுத்தக்கட்டமாக 3வது அலை ஏற்படுவதற்கு வாய்ப் புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரி வித்துள்ளனர். இதில், குழந்தைகள் அதி களவில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு கள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைக ளுக்கு தேவையான படுக்கைகள், மருந் துகள், ஆக்சிஜன், மருத்துவ உபகரணங் கள் தயார் நிலையில் வைக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதைய டுத்து சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு பிரத்யேக சிகிச்சைய ளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள் ளது. மேலும், படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதனிடையே சேலம் உருக்கா லையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவம னையில் குழந்தைகளுக்கு 50 படுக் கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்ப டுத்தப்பட்டுள்ளது. மேலும், குழந்தைக ளுக்கு பிரத்யேக சிகிச்சையளிக்க வேண்டிய நிலை உள்ளதால், மருத்து வர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி  ளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் அரசு மருத்து வமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி கூறுகையில், கொரோனா 3வது அலை யில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப் படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கள் தீவிர சிகிச்சை பிரிவில் 134 படுக் கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட் டுள்ளது. இதில், 50 படுக்கைகளுக்கு நேர டியாக ஆக்சிஜன் வசதியும், 20 வெண்டி லேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள் ளது. மீதமுள்ள படுக்கைகளுக்கும் நேர டியாக ஆக்சிஜன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 58 ஆயி ரம் கிலோ ஆக்சிஜன் கொள்கலன் மற் றும் 465 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவி கள் உள்ளது. மேலும், 3வது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப் பட வாய்ப்புள்ளதால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக, மூச்சுத்திணறல், இதய பாதிப்பு ஏற்படும் போது சிகிச்சையளிப் பது மிகவும் முக்கியமானது.  இதனால் துறை தலைவர்கள், மருத் துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பிரத்யேக சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இதில், 3-ல் 2 பங்கு மருத்துவர் கள், செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள் போன்ற பொம்மையை வைத்து பயிற்சி  அளிக்கப்படும். குழந்தைகளுக்கு சிகிச் சையளிக்க தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் என அனைத் தும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இவ் வாறு அவர் கூறினார்.

;