districts

img

புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கோரி புதுவையில் வாலிபர் சங்கம் போராட்டம்

புதுச்சேரி, ஆக. 11- புதிய வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் ஏற்படுத்தக் கோரி வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக கூட்டணி அரசு, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுகள் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பிற்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததைக் கண்டித்தும், ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளான ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 50 ஆயிரம் வேலை வாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகில் மாநில தலைவர் கௌசிகன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியக் குழு உறுப்பினர் ஆனந்த் துவக்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் சஞ்சைசேகரன்,  இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பிரவீன்குமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் நிலவழகன், ஜெயபிரகாஷ், ஜெயராஜ், அஜித்குமார், விண்ணரசன், கவியரசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.