வேலூர் கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற உலக தாய்மொழி நாள் விழாவிற்கு விஐடி துணைத் தலைவரும் கம்பன் கழக தலைவருமான ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார். பாலு, ரா.ப.ஞானவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பன் கழக செயலாளர் சோலை நாதன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பேசினார்.