சென்னை அருகே மாமல்லபுரத்தில் 23 ஏக்கர் பரப்பளவில் எஃப்சி மெட்ராஸ் அணியின் கால்பந்து பயிற்சி மையம் அமைந்துள்ளது. முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள்ள இந்த மையத்தில் மூன்று கால்பந்து மைதானங்கள் உள்ளன. இவற்றில் மின்னொலி வசதி செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மருத்துவ மையம், விளையாட்டு அரங்கம் உள்பட பல வசதிகள் உள்ளன. மைதானங்களில் செயற்கை, இயற்கை புட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.