districts

21வது நூற்றாண்டிலும் தொடரும் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் சாமி கும்பிட சென்றவர்களை தாக்கிய சாதி ஆதிக்க சக்திகளுக்கு சிபிஎம் கண்டனம்

விழுப்புரம், ஏப்.9- சாமிகும்பிடச்சென்ற பட்டியல் இன மக்கள் மீது சாதி ஆதிக்க சக்தி கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதற்கு சிபிஎம் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது.  விழுப்புரம் மாவட்டம், கோலி யனூர் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் உள்ள  திரவுபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழா நடத்த எல்லா சமூகத்தினரிடமும் நிதி வசூலிப்பது போலவே பட்டியலின மக்களிடமும் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஏழாம் நாள் திருவிழா பட்டியலின மக்களுக்கானதுதாகும். அதேவேளையில் வரி வாங்கிக் கொண்டாலும்  பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய ஆதிக்க சக்தியினர் அனுமதிப்பதில்லை. கடந்த  வெள்ளிக்கிழமை (ஏப்.7) இரவு சுமார் 8 மணியளவில் அதே கிராமத்தைச் சேர்ந்த கதி ரவன் என்கிற பொறியியல் படித்த தலித் இளைஞர் தனது திருமணமான சகோதரி கனி மொழி குடும்பத்தினருடன் கோயிலின் அருகே சென்று சாமி கும்பிட்டுள்ளார். கதிரவன் கோயில் மண்டபம் அருகே சென்று திரும்புவதைக் கண்ட கிராம ஆதிக்க சக்திகள் ஊராட்சி மன்றத் தலைவர் க.மணி வேல் தலைமையிலான கும்பல் கதிரவனிடம் வாக்குவாதம் செய்து சாதியைக் சொல்லி ஆபாசமாக திட்டியதோடு கொலைசெய்யும் நோக்கோடு  கொடூரமாகத் தாக்கி யுள்ளனர். சகோதரி கனிமொழி கொடுத்த தகவலின் பேரில் கதிர வனின்  பெற்றோர் கந்தன்,கற்பகம் ஆகியோர் தங்களது உறவினர்க ளுடன் விரைந்து சம்பவ இடத்துக்கு தங்கள் பிள்ளையை அடிப்பதைத் தடுத்து நியாயம் கேட்டுள்ளனர்.  இதனால் கோபம் அடைந்த சாதி வெறி கும்பல் மேலும் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு அவர்களை  தரக்குறைவாக பேசி அடித்து விரட்டியுள்ளனர். படுகாயமடைந்த கதிரவனும் அவரது பெற்றோரும் மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்று பிறகு வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள னர். இதனால் ஆவேசமான பட்டிய லின மக்கள் ஒன்றுகூடி சாதி வெறி கொண்டு தாக்குதல் நடத்திய வர்களைக் கைது செய்யக்கோரி விக்கிரவாண்டி – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு வரை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சம்பவஇடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரி கள் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த தின் பேரில் சாலைமறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், காவல்துறை இது வரை வழக்கு பதிவு செய்து குற்ற வாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. சனிக்கிழமை அன்று விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் தலை மையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்திலும் அதிகாரிகளின் முயற்சிகளுக்கு ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சுமுக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்தக் காலத்திலும் பட்டியலின மக்கள் மீதான கொடூர தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழுப்புரம் மாவட்டக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு காவல்துறை உடனடியாக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமெனவும் வருவாய்த்துறை பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடும் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டுமெனவும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும்  சாதிய வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

;