districts

img

தலித் குடியிருக்கு பகுதிக்கு ஆற்று நீர் விநியோகம் எப்போது?

விழுப்புரம், ஜூன் 24- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகு திக்கு உட்பட்ட தொரவி கிரா மத்தில் சுமார் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர், இதில் கணிசமாக ஆதிதிராவிட மக்களும் வசிக்கின்றனர், ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிக்கு தற்  போது வரை ஏரி பகுதியில்  இருந்து குடிநீர் வழங்கப்படு கிறது, இந்த குடிநீர் சுவை யற்றதாகவும், குடிக்க முடி யாத நிலையிலும் இருக்கி றது, எனவே அவர்கள் குடி யிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள வராக நதியிலிருந்து தங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுப்பி வந்தனர், இந்நிலையில் அரசு 2018-2019 எஸ்.சி, எஸ்டி சிறப்பு நிதி திட்டத்தின் கீழ்  சுமார் 1.25 கோடி நிதி ஒதுக்கி  சிமெண்ட் சாலை, குடிநீர் கிணறு, மேல்நிலை நீர்தேக்க  தொட்டி அமைக்கும் பணிகள்  நடைபெற்றன. ஆனால் கட்டி  முடிக்கப்பட்டு ஓராண்டாகி யும் அது இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதி காரிளிடம் பலமுறை முறை யிட்டும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை. எனவே புதிய அர சும், மாவட்ட நிர்வாகமும் உட னடியாக தலையிட்டு அந்த பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;