சாம்சங் தொழிலாளர்கள் சங்கப் பதிவு வெற்றியை கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். விழுப்புரம் மண்டல துணைச் செயலாளர்கள் வே.முருகன், கே.கந்தசாமி, ஜி.ரமேஷ், கிளைச் செயலாளர்கள் ஆர்.சிவா, கே.நடராஜன், சிஐடியு சங்க முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.