districts

img

விஐடி சிறந்த பல்கலைக்கழகமாக இந்தியா டிடாக்டிக்ஸ் அசோசியேஷன் தேர்வு

இந்தியக் கல்வி நிறுவனங்களில் அகில இந்திய அளவில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை (விஐடி) சிறந்த பல்கலைக்கழகமாக இந்தியா டிடாக்டிக்ஸ் அசோசியேஷன் தேர்வு செய்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற கல்வி மற்றும் திறன்களுக்கான ஆசிய உச்சி மாநாட்டில் மாலத்தீவு அரசின் உயர்கல்வி அமைச்சர் டாக்டர் இப்ரா`ஹிம் ஹாசன்  விருதை வழங்க விஐடி துணைத் தலைவர் டாக்டர் சேகர் விசுவநாதன் பெற்றுக் கொண்டார்.