districts

img

தரமேலாண்மையில் 53 இடங்கள் முன்னேறியது விஐடி!

வேலூர், டிச.24- உலக அளவில் தரமேலாண்மையில் விஐடி கடந்த ஆண்டை விட 53 இடங்கள் முன்னேறி உள்ளது. தரமேலாண்மை அமைப்பு ஒழுங்கு முறை (க்யூ.எஸ்) அமைப்பின் தனது நிலையான தன்மை பிரிவில் உலகப் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை அண்மையில் வெளியிட்டது. இப்பட்டிய லில் உலக அளவில் விஐடி 396 வது இடத்தை பெற்றுள்ளது. உலக அளவில் மொத்தம் 1744 பல்கலைக்கழகங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் மொத்தம் 78 கல்வி நிறுவனங்கள் இப்பட்டிய லில் இடம்பெற்றுள்ளது. இதில் விஐடி இந்தியளவில் 8ம் இடம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின்படி 17 வகை யான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து பல்வேறு பணிகள் உலக அளவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. உலகளவில் முதல் 400 கல்வி நிறு வனங்களில் நிலையான தன்மை பிரிவில் விஐடியும் இடம்பெற்றுள்ளது. க்யூ.எஸ் யின் நிலையான தன்மை தரவரிசை பட்டியல் 3 விதமான செயல்பாடுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. அவை சுற்றுச்சூழல் தாக்கம், சமுதாயத் தாக்கம் மற்றும் நிர்வாகம் என்பதாகும். இந்தியாவில் ஐஐடி தில்லி முதலிடமும் உலக அளவில் கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை தமிழக முன்னாள் முதலமைச்சர்  எம்.ஜிஆரின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டு வி.ஐ.டி  வளாகத்தில் உள்ள அவரது  சிலைக்கு விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், துணைவேந்தர்  டாக்டர். காஞ்சனா பாஸ்கரன்,  இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக்,  மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளனர்.