சென்னை, ஜூன் 18 -
போக்குவரத்து கழ கத்தில் ஒப்பந்த முறையில் அல்லது பணி ஓய்வு பெற்றவர்களை பணிக்கு எடுக்க கூடாது என்று தொழிலாளர் தனித்துணை ஆணையர் உத்தரவை மீறி மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறையில் ஓட்டுநர், நடத்துநர்களை நிய மிக்க கூடாது என வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) ஏப்ரல் 18 அன்று வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கி யது.
இதையடுத்து தொழி லாளர் உதவி ஆணை யர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். பேச்சு வார்த்தை முடியும் வரை தொழில் நிலைமைகளில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்று தொழிலாளர் உதவி ஆணையர் அறி வுறுத்தினார். அதை மீறி விரைவு போக்குவரத்து மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழகங்களில் அவுட்சோர்சிங் முறையில் ஆள் எடுத்தனர். இதனை கண்டித்து தொழிற்சங்கம் தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகம் முன்பு சிஐடியு போராட்டம் நடத்தியது.
அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதனை சுட்டிக்காட்டியது. அப்போது, போக்குவரத்து சட்டங்களில் ஒப்பந்த முறை யில் ஆள் எடுக்க இடம் இல்லை. விதிவிலக்காக நியமிக்கப்பட்டால் கூட நிர்வாகமும், அவுட்சோர்சிங் செய்யும் நிறுவனமும் தொழிலாளர் ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். இதனை மீறியதற்காக கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும் என்று உதவி ஆணை யர் போக்குவரத்து கழ கத்தை கடுமையாக எச்ச ரித்துள்ளார்.
இந்த நிலையில், ஓய்வு பெற்றவர்களையும் நிர்வாகம் பணிக்கு எடுத்து வருவதாக ஜூன் 15 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தொழிற் சங்கங்கள் குற்றம் சாட்டின. பணி நியமனம், நிரந்தரம் ஆகியவற்றில் ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை மீறக்கூடாது. அவுட்சோர்ஸ், கான்ட்ராக்ட் முறை கூடாது என்று தலைவர்கள் வலி யுறுத்தி உள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட தனித்துணை ஆணையர் ரமேஷ், அவுட்சோர்சிங் முறையை செயல்படுத்தக் கூடாது, ஓய்வு பெற்ற ஓட்டுநர்களை மீண்டும் பணிக்கு எடுக்க கூடாது. தற்போதைய பணி நிலை தொடர வேண்டும் என்றும் மீண்டும் அறிவுறுத்தி உள்ளார்.
இதற்கு மாறாக, குரோம்பேட்டை, ஆதம் பாக்கம் உள்ளிட்ட பணி மனைகளில் தினக்கூலி முறையில் பணியாற்ற அறிவிப்பு செய்து விளம்பரங்களை மாநகர போக்குவரத்து கழகம் வைத்துள்ளது. அதில், கடந்த 3 ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்ற ஓட்டு நர்கள் பணிக்கு தேவைப்படு கிறார்கள். ஒரு ஷிப்ட் முறை யில் ரூ 800 ஊதியம் தரப்படும். விருப்பம் உள்ள வர்கள் தொடர்பு கொள்ள லாம் என்று கூறப் பட்டுள்ளது.
இதனால் தொழி லாளர்களும், தொழிற் சங்ககளும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தொழிலாளர் ஆணையரின் உத்தரவை மீறி நிர்வாகம் செயல்படுவதால் தொழில் அமைதி பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது என்று தொழிலாளர்கள் தெரி விக்கின்றனர்.