districts

img

சிபிஎம் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்

விழுப்புரம்,ஜன.27- விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்கப்  பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு வட்டச் செயலாளர் எம்.கே.முருகன்  தலைமை தாங்கினார், முன்னதாக வட்டக் குழு  உறுப்பினர் எஸ்.பாலமுரு கன் அனைவரையும் வரவேற்று பேசினார். பொதுக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர். இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன்,ஜி.ராஜேந்திரன், சே.அறிவ ழகன், வி.அர்ஜுனன், வட்டக்குழு உறுப்பினர்கள் ஐ.சேகர், வி.சுந்தரமூர்த்தி, ஆர்.சேகர், கே.மாயவன், ஏ.அன்சாரி,கே.நடராஜன், ஜே.முகமது அனாஸ், எம். அசுவத்தாமன்,ஆர்.விஸ்வநாதன், கே.லலிதா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.