districts

img

பேருந்து நிறுத்தத்தை மாற்றுவதா கிராம மக்கள் மறியல்

விழுப்புரம்,ஆக 5-

     விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதற்காக விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் மேம்பாலம் மற்றும் ரவுண்டானாவை அமைக்கப்பட்டு  வருகிறது.  

    இந்த பணிக்காக ஜானகிபுரம் பகுதியி லிருந்த பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டு, சுமார் 1.5 கி.மீ. தொலைவைத் தாண்டியுள்ள பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதனால் ஜானகிபுரம், கொளத்தூர், கண்டமானடி, அரியலூர், வேலியம்பாக்கம், அத்தியூர் திருவாதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரி தும் பாதிக்கப்படுவது. பேருந்து நிறுத்தம் செல்ல வேண்டுமெனில் ஒன்றரை கி.மீ.  தொலைவு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.  எனவே ஏற்கனவே இருந்த இடத்திலேயே பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் எனக் கோரி, அப்பகுதி மக்கள் விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் சனிக்கிழமை (ஆக.5) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

   இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் வேல்முருகன், தாலு்கா காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று,  சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். தற்போது சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாலும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் வசம் இடமிருப்பதால், அவர்களி டம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அமைதியாக இருக்குமாறும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.