districts

img

மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு

ராணிப்பேட்டை, டிச. 20 -  ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த முள்ளுவாடி ஊராட்சிக்குட்பட்ட ஆற்காடு - செய்யாறு சாலை அருகே சதீஷ் என்பதற்கு சொந்தமான கட்டிடத்தில் அரசு மதுபான கடை புதனன்று (டிச. 20) திறக்க இருந்த நிலையில் அப்பகுதி மக்கள் மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு போராட்டம் நடத்தினர். மற்றொரு தரப்பினர் மதுபானங்களை வாங்க வருகை தந்ததால்  இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு, ஆற்காடு வட்டாட்சியர் மற்றும் கலவை காவல் துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து  பேச்சு வார்த்தை நடத்தினர். மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரி வித்து பொதுமக்கள் மதுபான கடையின் முன்பு அமர்ந்து சிறப்பு கிராம சபை கூட்டத்தை நடத்தினர். இதில்  கிராம பொது மக்கள் முன்னிலையில் மதுபான கடை  திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர், வார்டு உறுப்பினர்கள் உட்பட தீர்மானம் நிறை வேற்றினர்.