districts

img

விஜயராகவலு இல்லத் திருமண விழா

அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தி.நகர் பணிமனை செயலாளர் விஜயராகவலு மகள் வி.ஸ்ரீவைஷ்ணவி - ஏ.ராஜேஷ் ஆகியோரது திருமண வரவேற்பு வெள்ளியன்று (பிப்.14) கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. சிஐடியு நடத்தும் நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக 5 ஆயிரம் ரூபாயை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் மணமக்கள் வழங்கினர். சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, பொதுச்செயலாளர் வி.தயானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.