சென்னை, பிப். 10- எம்.சி.ரோடு வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருமான ஆர்.ராதாகிருஷ்ணன் தந்தை கே.ராமசாமி ஞாயிறன்று (பிப். 9) காலமானார். அவரது உடலுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்தின், ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, சென்னை மாவட்ட சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.வெங்கட், எம்.சி. ரோடு வணிக வளாக வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.செல்வானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் திங்களன்று (பிப். 10) காசிமேட்டில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.