districts

img

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிவு

போரூர்,அக்.16-  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.  இந்த நிலையில் ஞாயிறன்று 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.  வழக்கம் போல விறுவிறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் அதிகாலையில் சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து வெகுவாக குறைந்து விட்டதால் மந்தமானது. வரத்து அதிகம் காரணமாக கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒருகிலோ ரூ.80-க்கு விற்ற ஊட்டி கேரட் ஞாயிறன்று விலை குறைந்து ரூ.50-க்கும்,கிலோ ரூ.70-க்கு விற்ற பீன்ஸ் ரூ.40-க்கும் விற்பனையானது.   மற்ற காய்கறிகளின் விலையும் சற்று குறைந்தே காணப்பட்டது. ஆனால் வரத்து குறைவால் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சின்ன வெங்காயம் தற்போது ஒருகிலோ ரூ.90-க்கு விற்பனை ஆனது. வரத்து அதிகரித்து காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டதால் ஏராளமான மூட்டைகளில் காய்கறிகள் தேக்கமடைந்தன. இதனால் மொத்த வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை விபரம் வருமாறு (கிலோவில்):- தக்காளி-ரூ.38, நாசிக் வெங்காயம்-ரூ.32 ஆந்திரா வெங்காயம்-ரூ.16 உஜாலா கத்தரிக்காய்-ரூ.12 வரி கத்தரிக்காய்-ரூ.10 அவரைக்காய்-ரூ.35 வெண்டைக்காய்-ரூ.15 முருங்கைக்காய்-ரூ.70 பீன்ஸ்-ரூ.40 ஊட்டி கேரட்-ரூ.50 பீட்ரூட்-ரூ.30 முட்டைகோஸ்-ரூ.14 முள்ளங்கி-ரூ.15 சவ்சவ்-ரூ.10 காலிபிளவர் ஒன்று-ரூ.20 பீர்க்கங்காய்-ரூ.30 பன்னீர் பாகற்காய்-ரூ.45, சுரக்காய்-ரூ.8 புடலங்காய்-ரூ.15 கொத்தவரங்காய்-ரூ.25 என விற்பனையானது.