விழுப்புரம்,ஆக.16- நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை ஒட்டி விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவல கத்தில் வியாழக்கிழமை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு கட்சி யின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.. செங்கொடியை முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில செயற் குழு உறுப்பினர் டி.ரவீந் திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன்,எஸ்.கீதா, ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி, எஸ்.வேல்மாறன், சே.அறிவழகன், ஆர்.டி.முரு கன், வட்ட செயலாளர் ஆர்.கண்ணப்பன்,நகர செயலாளர் எம்.முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.