districts

மக்களுக்காக போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளை முடக்குவதா?

திருவள்ளூர், பிப்.9- மக்கள் கோரிக்கைகளை தீர்க்க   நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகளை  காவல்துறையினரை வைத்து முடக்குவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இது குறித்து கட்சியின் திரு வள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை தொடங்கி கன்னி கைபேர், பெரியபாளையம், தண்டலம் வழியாக புதுக் கோட்டை வரை 32 கிமீ  தேசிய நெடுஞ்சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீர மைக்கப்படவில்லை. இதனால் ஆங்காங்கே  பள்ளங்கள் ஏற்பட்டு மரண குழிகளாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற உள்ளது. இச்சாலையை  சீர்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரியபாளையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி  வரும் செவ்வாயன்று (பிப்.11)  நடைபயணம் செல்ல  பெரியபாளையம், ஊத்துக் கோட்டை காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை காவல்துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர், சம்மந்தப்பட்ட  நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் சாலை சீரமைப்பு  குறித்து தலையீடு செய்யாமல் நடைபயணம் செல்ல அனுமதிக்க முடி யாது. நீங்கள் அரசியல் செய்கி றீர்கள், மீறி ஒன்று கூடி னால் கைது செய்து விடு வேன் என்று மிரட்டும் தொணி யில் பேசியதோடு, அனுமதி யும் மறுத்துள்ளார். விஷ்ணு வாக்கம் கூட்டுறவு சொசைட்டி கட்டுவது குறித்து பிரச்சனையிலும் இதே போன்று சம்பந்தப்பட்ட அதி காரிகளை பேச வைக்காமல் காவல்துறை அதிகாரிகள் நேரடியாக போராடுபவர்களை ஒன்று கூட விடாமல்,   சாலை யில் நிற்க கூடாது. நின்றால் உங்களை கைது செய்து விடுவேன் என அனைத்து இடங்களிலும் அராஜகமான முறையில் நடந்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டம்,  கடம்பத்தூர் ஒன்றியத்துக் கட்பட்ட பிஞ்சிவாக்கம் கிராமத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு மறுவாழ்வு கொடுத்திட முதலமைச்சரின் விடியல் திட்டத்தின் மூலம் செங்கல் சூளை உற்பத்தி தொழில் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் முறை கேடுகள்  நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதை கண்டறிந்து முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்து,  விடியல் திட்டம் முறையாக நடைபெற அரசின் கவனத்திற்கு கொண்டு  செல்ல வலியுறுத்தி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பிப்.13 அன்று கடம்பத்தூர் பிடிஒ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்கும்  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடைபெறும்  இயக்கங்க ளுக்கு காவல்துறையினர் தடை விதிக்கின்றனர். மக்கள் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாலும்,  காலம் கடத்துவதாலும் போராட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. கடந்த 2024 டிச 22 ஆம் தேதியன்று  சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 10 ஆண்டுகள் கடந்த பிறகும் உரிய இழப்பீடு வழங்க வில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலை மையில் திருவள்ளூர் அருகில் உள்ள பட்டறை பெருமந்தூர் சுங்கச்சாவடியின் அருகே போராட்டம் அறிவித்தார்கள். போராட்டம் தொடங்கிய உடனேயே அராஜகமான முறையில் விவசாயிகளை கட்டாயப்படுத்தி கைது செய்தனர். போராட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் சங்க மாநில தலைவர்  பி.சண்முகத்தை காவல் துணை கண்காணிப்பாளர்    சட்டையை பிடித்து இழுத்து அராஜகமாக நடந்து கொண்டார். பள்ளிப்பட்டு பிடிஓ அலுவலகம் முன்பு நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.மாவட்டம் உதயமாகி 27 ஆண்டுகள் கடந்து விட்டது. மக்கள் தொகையும் அதி கரித்துள்ளது பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. அரசு நிர்வாகம் மக்கள் பிரச்ச னைகளை தீர்த்திட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்,  விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்,  சிறப்பு முகாம்  கள் நடத்தி மனுக்களை பெறு கிறார்கள். இவற்றில் பெரும் பாலும் தனிப்பட்ட நபர்களின் கோரிக்கைகளே மனுக்களாக கொடுக்கப்படுகிறது.   பேருந்து வசதி,  சாலை சீரமைத்தல், சுகாதாரம், நூறு நாள் வேலை திட்டம் ஊதிய பாக்கி, குடிமனை  பட்டா வழங்காமல் இருப்பது,  மாற்று இடம் வழங்காமல் குடிருப்புகளை அகற்றுவதை வழங்கமாக கொண்டுள்ளது. அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் கோரிக்கைகள் நிறைவேறாத போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல கோரிக்கைகள் நிறைவேற்ற மக்கள் தன்னெழுச்சியாகவும்,  கட்சிகள்,  சில அமைப்புகள் சார்பில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தப்படுகிறது.காவல்துறையினர் மனுக்களை பெற்றுக் கொண்டு கடைசி நேரத்தில் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுக்கப்படுகிறது. சில நேரங்களில் மனுவை வாங்காமல் மறுத்துவிட்டு உயர் அதிகாரியை சந்தித்து கொள்ளுங்கள் என  அலை  கழிக்க வைப்பதும் நடைபெறு கிறது. எனவே மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல  ஜனநாயக பூர்வமாக   போராடும் அமைப்பு மற்றும் கோரிக்கையின் தன்மை குறித்து சம்பந்தப்பட்ட அதி காரிகளுடன் கலந்தாலோ சிக்காமல்  காவல்துறையே அனுமதி மறுப்பது தொடர்கிறது. கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் தலையீடு செய்து இயக்கம் நடத்தும் அமைப்புகளுடன்  பேசி  பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தாமல் சட்டம் ஒழுங்கு பாதிப்பு என காவல்துறைக்கும் போராடும் அமைப்புக்குமான பிரச்சனையாக மாற்றப்படுகிறது.   மக்கள் கோரிக்கை களுக்கான ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு உரிய முறையில் அனு மதி வழங்குவதற்கும் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதி காரிகள் உடனடியாக தலை யீடு செய்வதற்கும், மாவட்ட ஆட்சியர் உரிய முறையில்  தலையீடு செய்திட வேண்டு மாய்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் வலி யுறுத்தியுள்ளார்.