திருவள்ளூர், அக் 14- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோ சனைக் கூட்டம் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் திங்களன்று (அக் 14) நடைபெற்றது. இதில் வேளா ண்மைத்துறை இயக்குநர், திரு வள்ளுர் மாவட்ட கண்காணிப்பு அலு வலர் பி.முருகேஷ், மாவட்ட ஆட்சி யர் த.பிரபுசங்கர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருவள்ளுர் மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 8, அதிக பாதிப்பு ஏற்படும் பகுதி கள் 39, மிதமான பாதிப்பு ஏற்படக் வடிய பகுதிகள் -44, குறைவான பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் - 42 என மொத்தம் 133 பகுதிகள் கண்ட றியப்பட்டு மேற்படி பகுதிகளுக்கு பல்வேறு துறைகள் அடங்கிய மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும், 4 குழுக்கள் முறையே முன்னெச்சரிக்கை குழுவில்10 உறுப்பினர்கள் கொண்ட 1 குழுவும், தேடுதல் மற்றும் மீட்பு குழுவில் 20 உறுப்பினர்கள் கொண்ட 2 குழு வும், வெளியேற்றுதல் குழுவில் 51 உறுப்பினர்கள் கொண்ட 3 குழுவும், தற்காலிக தங்கும் முகாம் குழுவில் 61 உறுப்பினர்கள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேற்கண்ட குழுக்களுக்கு கடந்த 4ம் தேதி நடைப்பெற்ற ஆய்வுக் வட்டத்தில் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 4,480 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 500 தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 500 தன்னார்வலர்களுக்கு ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 50 அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு புயல் பாது காப்பு மையங்கள் வைரவன் குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும், பல்நோக்கு பாது காப்பு மையங்கள், திருப்பாலை வனம், ஆண்டார்மடம், பள்ளிப் பாளையம், எளாவூர் -1 மற்றும் எளாவூர் -II (மெதிப்பாளையம்) ஆகிய 5 இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது என்றார்.