இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு பகுதி, 113ஆவது வட்டம் பார்த்தசாரதி புரம் கிளை சார்பில் பொங்கல் விளையாட்டு விழா மற்றும் கலைவிழா எஸ்.அருண் தலைமையில் நடைபெற்றது. இதில் 113ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் பிரேமா சுரேஷ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இலக்கிய செயற்பாட்டாளர் எஸ்.வி. வேணுகோபாலன், சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் எல்.விக்னேஷ், சிபிஎம் ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் வெ.இரவீந்திர பாரதி உள்ளிட்டோர் பேசினர்.