districts

img

அரசு மருத்துவமனைகளில் 2857 ஐசியூ படுக்கைகள் உள்ளன: கேரள முதல்வர்

திருவனந்தபுரம், மே 6- கேரளத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2857 ஐசியு படுக்கைகள் உள்ளதாக முதல்வர் பின ராயி விஜயன் தெரிவித்துள்  ளார். இதில், 996 படுக்கை கள் கோவிட் நோயாளிகளின் சிகிச்சைக்காகவும், 756 படுக்கைகள் கோவிட்  அல்லாத நோயாளி களின் சிகிச்சைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார். புதனன்று மாலை  செய்தியாளர் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது:  சுமார் 38.7 சதவிகிதம்  அரசு மருத்துவமனை களில் ஐசியூ படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவ மனைகளில் உள்ள 7085 ஐசியு படுக்கைகளில், 1037 தற்போது கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன் படுத்தப்படுகின்றன.  அரசு  மருத்துவமனைகளில் தற்போதுள்ள வென்டி லேட்டர்களின் எண்ணிக்கை 2293 ஆகும். இவற்றில், 441  வென்டிலேட்டர்கள் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும் 185 படுக்கைகள் கோவிட் அல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும் பயன் படுத்தப்படுகின்றன.  

தற்போது, அரசு மருத்துவ மனைகளில் உள்ள வென்டி லேட்டர்களில் 27.3 சதவிகிதம்  பயன்பாட்டில் உள்ளன. தனி யார் மருத்துவமனைகளில் உள்ள 1523 வென்டி லேட்டர்களில், 377 தற்போது கோவிட் சிகிச்சைக்கு பயன் படுத்தப்படுகின்றன. சிஎப்எல்டிசிகளில் சுமார்  0.96 சதவிகிதம் படுக்கை களும், சிஎல்டிசிகளில் 20.6 சதவிகிதம் படுக்கைகளும் ஆக்ஸிஜன் படுக்கைகளா கும். மருத்துவக் கல்லூரி களில் மொத்தம் உள்ள 3231 ஆக்ஸிஜன் படுக்கை களில், 1975 தற்போது பயன்பாட்டில் உள்ளன. அதில் 1731 கோவிட் சிகிச்சைக்காக ஒதுக்கப்  பட்டுள்ளன. இதில் 1429 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்ற னர். 546 படுக்கைகளில் கோவிட் அல்லாத நோயாளி கள் உள்ளனர். தனியார்  மருத்துவமனைகளில் உள்ள  2990 ஆக்சிஜன் படுக்கை களில், 66.12 சதவீத ஆக்ஸி ஜன் படுக்கைகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தாகவும் முதல்வர் கூறினார்.

;