districts

img

தெருவே சாக்கடையாக மாறிய அவலம்!

சென்னை பெரிய மேட்டில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் பிரதான வாயில் எதிரில் உள்ளது  சைடனாம்ஸ் சந்து. சென்னை மாநகராட்சி மண்டலம் 5க்குட்பட்ட 58ஆவது வட்டத்தில் உள்ள சைடனாம்ஸ் தெருவில் இதுபோல் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவது இது ஒன்றும் புதிதல்ல. கோவிட் தொற்றுக்கு முன்பாக (2019) கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக புதிதாக பள்ளம் தோண்டப்பட்டு பைப்புகள்  புதைக்கப்பட்டன. அதன் பிறகு பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் சாலையை செப்பனிடாமல் விட்டுவிட்டதால் இந்த தெருவே கால்வாய் போல மாறி சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அடிக்கடி வந்துசெல்லும் இடமாக இருந்தாலும் இந்த பிரச்சனை மட்டும் கண்டுகொள்ளப்படவே இல்லை எனவும் ஆட்சியாளர்கள் அப்பகுதிக்கு வரும் போது பெரியபெரிய பேனர் வைத்து அந்த இடத்தை மறைத்துவிடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தத் தெருவில் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் நிலைமை இன்னும் படுமோசமாக மாறி துர்நாற்றம் வீசிவருகிறது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா..?