திருவள்ளூர், டிச.4- தாமரைப் பாக்கம் அருகில் உள்ள பகத்சிங் நகர், அகரம் கண்டிகை சுற்றி யுள்ள கிராமங்களுக்கு செல்ல ஏற்கெனவே இருந்த பாதையை சீரமைத்துத்தர வலி யுறுத்தி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பகத்சிங் நகர், அகரம் கண்டிகை அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்வதற்கு ஏற்கெனவே இருந்த வழியில் பாதை அமைக்க வேண்டும், கொமக்கம்பேடு பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும், தாமரைப் பாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் கட்டி முடிக்கப்படாத கால்வாய்களை விரைவில் சீர்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தாமரைப் பாக்கம் கூட்டுச்சாலை நான்கு வழி சந்திப்பில் இந்த போராட்டம் நடை பெற்றது. இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் பேசி அடுத்த வாரத்தில் நிறைவேற்றுவதாக அங்கு கூடியிருந்த மக்களிடம் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.இந்த போராட்டத்துக்கு ஊத்துக்கோட்டை வட்ட குழு உறுப்பினர் புஷ்பலதா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத், வட்ட செயலாளர் என். கங்காதரன், வட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவண்ணன், சி. பாலாஜி, கூட்டுச் சாலை கட்சி கிளை செயலாளர் பி.தேவேந்திரன் செல்வம், கிருஷ்ணன், அரசன், சரவணன், மணிவாசகம், உமாபதி, உறுப்பினர்கள் ஹேமலதா, செண்பகவள்ளி, தாட்சாயணி, கவிதா மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.