சிதம்பரம், செப். 20- சிதம்பரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிதம்பரம் - கடலூர் புறவழிச்சாலை லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய பேருந்து நிலையப் பணி களுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (செப்.20) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். சிதம்பரம் நகராட்சி தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி னார். புதிய பேருந்து நிலையத்தில் 50 பேருந்துகள் நிற்கும் வகையிலும் 3,367 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படு கிறது. அதன் பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பேருந்து நிலையத்தில் 52 கடைகள், உணவகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, போக்குவரத்து கழகங்களுக்கு தனித்தனி அறைகள், பொதுமக்கள் பேருந்து பயணிகள் வசதிக்காக ஏடிஎம் இயந்திரம், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அனைத்தும் நவீன முறையில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் உதவியாளர் ஸ்வேதா சுமன், வட்டாட்சியர் செல்வகுமார், சிபிஎம் மூத்த தலைவர் மூசா, நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர்மன்ற உறுப்பினர் தஸ்லிமா, திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.