தாம்பரம், மார்ச் 30- தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோகு லகண்ணன் (வயது32), இவரது மனைவி லோகப்பிரியா (26), இவர்களுக்கு கடந்த 8 மாதங்க ளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கோகுல கண்ணன் மனைவி லோகப் பிரியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகப்பிரியா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு கோகுல கண்ணன் மற்றும் அவரது தாய் ராஜேஸ்வரி ஆகியோர் தகவல் தெரிவித்தனர். காவல்துறை விசார ணையில் கூடுதல் வரதட்சணை கேட்டு லோகப்பிரியாவை அவரது கணவர் கோகுலகிருஷ்ணன் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கோகுல கிருஷ்ணன் அவ ருக்கு உடந்தையாக இருந்த தாய் ராஜேஸ்வரி ஆகிய 2 இருவரை யும் கைது செய்தனர்.