திருவண்ணாமலை, டிச. 14- சுதந்திர போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செய லாளர் எம். சிவக்குமார் தலைமை தாங்கி னார். என்.சங்கரய்யா படத்தை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், பா. செல்வன், எம்.பிரகலநாதன், கே. வாசுகி, எஸ். ராமதாஸ், என்.சேகரன், ஏ.லட்சு மணன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர்கள், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, 50 தீக்கதிர் சந்தாவிற்கான நிதியை உ.வாசுகியிடம் தீக்கதிர் பொறுப்பாளர் ப. செல்வன் வழங்கினார்.