சிதம்பரம், ஜன.2- தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பு குழு அமைப்புக் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் தர்மதுரை தலைமை தாங்கினார். அமைப்பின் மாநிலப் பொருளாளர் எஸ்.துரைராஜ் கலந்து கொண்டு அமைப்பின் நோக்கங்கள் குறித்து பேசினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சரவணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் வாஞ்சிநாதன், அமைப்பின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் விஜய், கீரப்பாளையம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் செல்லையா, மருதவாணன், சாமி நாதன் மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய குத்தகை விவசாயிகள் கலந்து கொண்ட னர். குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி விவசாயிகள் நிலத்தை அரசு பதிவு செய்து சாகுபடி தாரர்களுக்கு ஒப்படைக்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் தொகையை சாகுபடி செய்யும் விவ சாயிகளுக்கே வழங்க வேண்டும். குத்தகைத் தொகையை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி வரும் நிர்வாகத்தின் மீது சட்ட ரீதியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் பாதிப்பு காலங்களில் சாகுபடி மகசூல் தொகையை குறைவாக வசூலிக்க வேண்டும். குத்தகை விவசாயிகளை நிர்பந்திக்கக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.