districts

img

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழா

சென்னை, செப். 21 - கவிஞர் தமிழ்ஒளி பிறந்தநாள் நூற் றாண்டு நிறைவு விழா சனிக்கிழமையன்று (செப்.21) சென்னை பச்சையப்பன் கல்லூரி யில் நடைபெற்றது. பொதுப்பள்ளிக்கான மாநில மேடையும், பச்சையப்பன் வாசகர் வட்டமும் இணைந்து இந்நிகழ்வை நடத்தின. ‘கவிஞர் தமிழ்ஒளி எனக்குள் கடத்திய செய்தி’ எனும் தலைப்பில் நூறு பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற உரையரங்கு நடை பெற்றது. இந்த நிகழ்வை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்ததோடு, குழந்தை ளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களை யும் வழங்கினார். பேரா. க.கணேசன் எழுதிய ‘தமிழ வாழும் வரை கவிஞர் தமிழ்ஒளி வாழ்வார்’ எனும் நூலை அமைச்சர் வெளி யிட, சிகரம் ச.செந்தில்நாதன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், “தாமரை அல்லியைப் பார்த்து, உனக்கு ஏன் கதிரவனின் முகத்தை பார்க்க விருப்பம் இல்லையா? என்று கவிஞர் தமிழ்ஒளியின் ஒரு கவிதை படைத்திருப்பார். இன்றைக்கு கவிஞர் தமிழ்ஒளி இருந்திருந்தால், தாமரையே, தாமரையே நீ அல்லியை கேட்பது இருக்கட்டும். ஒட்டு மொத்தமாக உதயசூரியன் கல்விக்கான நிதியை உன்னிடம் கேட்கிறதே! அதை நீ எப்போது தரப் போகிறாய்? என்று எழுதியிருப்பார். அண்ணா படித்த கல்லூரி வளாகத்தில், கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டை கொண் டாடுவது பெருமையானது. கவிஞர் தமிழ் ஒளியை பாரதியாரின் வழித்தோன்றலாக வந்த பாரதிதாசனின் மாணவர். அவர் எழுதி யிருக்கிற பாடல்களில் அந்த இருவரின் பிரதி பலிப்பும் இருக்கும். மே தினத்தை முதன் முதலில் சிங்கார வேலர் கொண்டாடினார் என்றால், முதலில் கவிதை வடித்தவர் தமிழ்ஒளி. வாழ்நாள் முழு வதும் தமிழுக்காக, மக்களுக்காக வாழ்ந்தார். தமிழ்ஒளி முழுமையாக தன்னை சமுதாயத் திற்காக அர்ப்பணித்துக் கொண்டார். தமிழ்  மொழி என்பது எவ்வளவு அவசியம் என்பதை  உணர்த்தியதில் முன்னோடியாக கவிஞர்  தமிழ்ஒளி இருக்கிறார். அவரது கருத்துகளை வாழ்நாள் முழுவதும் உள்வாங்குவோம்,” என்றார். இந்நிகழ்வில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, தலைவர் ரத்தின சபாபதி, பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர் முனைவர் ரேவதி உள்ளிட்டோர் பேசினர்.