கடலூர், பிப்.9- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெய்வேலி யில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர். கார்த்திகேயன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பூர்வ சந்திரன் வரவேற்றார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் டி.பிரியா சமர்ப்பித்தார். வானவில் மன்றம், துளிர் திறன் தேர்வு, குழந்தைகள் அறிவியல் மாநாடு, அறிவியல் பிரச்சாரம், பள்ளி மேலாண்மைக்குழு, முல்லை மகளிர் குழு, துளிர் இல்லம், சமம்,சூழலியல், ஆரோக்கி யம் மற்றும் கலைக்குழு சார்ந்த பணிகளில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கையை சமர்ப்பித்தார். வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் டி.ஜெய்பிரகதி சமர்ப்பித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.தாமோதரன் வாழ்த்திப் பேசினார்.சமூக மாற்றத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில் எஸ்.ஜி. ரமேஷ்பாபு உரையாற்றினார். மாநிலச் செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் உள்ளிட்ட பலர் பேசினர். நெய்வேலி நகரச் செயலாளர் கொளஞ்சியப்பன் நன்றி கூறினார். நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக ஆர்.கார்த்தி கேயன், செயலாளராக பி.தனலட்சுமி, பொருளாளராக எஸ்.மணிமொழி தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் பொது மக்களை மூட நம்பிக்கை மூலம் திசை திருப்பும் கருத்துக்களுக்கு எதிராக அறிவியல் பிரச்சாரம் செய்ய வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு குழுக்களிடம் அதிக வட்டி வசூல் செய்யும் தனியார் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். 2023, 2024 துளிர் தேர்வு எழுதிய மாணவர்களில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களை ஒரு நாள் களப்பயணமாக அழைத்துச் செல்வது. மாவட்டம் முழுவதும் கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, வடலூர் மற்றும் விருத்தாச்சலம் ஆகிய நகரங்களில் தேசிய அறிவியல் தினவிழா நடத்திட வேண்டுமெனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.